Posts

தமிழ்ப் பழமொழிகள்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. அகல உழுகிறதை விட ஆழ உழு. அகல் வட்டம் பகல் மழை. அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு. அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான். அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது. அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா? அடக்கமே பெண்ணுக்கு அழகு. அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார். அடாது செய்தவன் படாது படுவான். அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும். அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள். அடியாத மாடு படியாது. அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம். அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும். தமிழ்ப் பழமொழிகள்

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Image

சங்ககால தமிழர் வரலாறு

Image
முன்னுரை:    தோராயமாக 400 BC ல் இருந்து 500 Ad வரை ஆன காலமே சங்க காலமாக கருதப்பட்டது . இந்த காலத்தில் தமிழகத்தை சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்டு வந்தார்கள் . சங்க காலத்தில் மூன்று வகை சங்கங்கள் இருந்தன அவை முறையே முதல், இடை, கடை சங்கம் எனப்படும். நாம் இந்த சங்ககால வரலாற்றை ஆராய்ந்தோமானால் சங்ககால தமிழரின்இலக்கியம், நாகரிகம், பண்பாடு, தொழில், பக்தி, அறிவியல் அறிவு என்று நாம் அறிந்துகொள்ள எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. கற்றது கை மண் அளவு என்பதற்கு ஏற்ப என் சிற்றறிவுக்கு தெரிந்த சிலவற்றை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். இலக்கியம்: சங்க இலக்கியங்கள் குறிப்பிட்ட காலவரையறைக்கு உட்பட்டவை தன் காலச் சமுதாயத்தை பிரதிபலிப்பதாகும். எண்ணற்ற புலவர்கலால் அகப் பாடல்களும் , புறபாடல்களும் பாடப்பட்டன அவைகளும் அக்கால சமுதாயத்தை சித்தரிப்பதற்காகவே எழுந்தன எனலாம். கடை ஏழு வள்ளல்களும் வாழ்ந்த காலமிது . சமுதாயச் சித்திரிப்பு:- சங்க இலக்கியம் சமுதாயத்தில் உயர்ந்தவர்களையே அவர்களது வாழ்க்கை முறைகளையே புனைந்துரைக்கின்றது. சமுதாயத்தில் உள்ள நல்லதை மட்டுமே எடுத்துரை...

முதன் முதலில் பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்கள் என்று கூறியது தமிழன்

Image
உங்களுக்கு தெரியுமா முதன் முதலில் பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்கள் என்று கூறியது சூரிய நாராயண சாஸ்திரகளார் என்பவராவார், இதை 5000வருடங்களுக்கு முன்பே கல்வெட்டுகளில் பதிந்துள்ளார் மற்றும் இவ்வுலகின் முதல் calendar உருவாக்கியது தமிழர்களே, இன்றைக்கு இருக்கும் ஆங்கில calendar தமிழ் காலண்டரை தழுவியே உருவானது, அதுமட்டுமல்லாமல் மாயன் calendarல் உள்ள எண்கள் தமிழ் மொழியின் எண்கள் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர் தமிழ் மொழி பிறந்து 50000, ஐம்பதாயிரம், வருடங்கள் ஆகின்றது என்றும், இவ்வுலகின் முதன் மொழி தமிழ் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர் மனிதர்கள் அதிகம் பேசும் மொழியாக இன்று மொரிஷியஸ் உள்ளது , தமிழர்கள் தான் மொரிஷியஸ் ன் மூதாதையர்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர், எகிப்திற்கு முதன் முதலில் குடி பெயர்ந்தவர்கள் தமிழர்கள் என்று ஆய்வாளர்கள் ஆதார பூர்வமாக நிருபித்து உள்ளனர், 3000 வருடங்களுக்கு முன்பாகவே கிரேக்கர்கள் பாண்டிய நாட்டில் காவலாளியாக பனி புரிந்துள்ளனர், அது மட்டுமல்லாமல் முருகன் முழு தமிழ் கடவுள் என்பது நாம் அறிவோம், பழனியிலுள்ள முருகன...

84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு - எது

Image
84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு... உங்களுக்கு தெரியுமா? எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ?? அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !! கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம் கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம். இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான் உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது உலகத்தில் முதன் முதாலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான் கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை, அதற்கு பதில் கர்ப்பமாக இருக...

முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ - Galileo

Image
 கடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன்” “பிரபஞ்சத்தை அது எழுதப்பட்ட பண்பாட்டுப் பங்களிப்புகளில் பழக்கமாகி அதன் மொழியைக் கற்பதுவரை நாம் வாசிக்க முடியாது. அது கணித மொழியில் எழுதப் பட்டுள்ளது. அதன் எழுத்துக்கள் எவையென்றால் கோணங்கள், வட்டங்கள் அவை போன்ற மற்ற வரைவியல் வடிவங்கள் (Geometrical Figures). அவை இல்லாமல் பிரபஞ்சத்தின் ஒரு சொல்லைக் கூட மனிதர் புரிந்து கொள்வது இயலாது.”--காலிலியோ-- 1600 ஆம் ஆண்டில் புருனோ [Giodarno Bruno] உயிரோடு கம்பத்தில் எரிக்கப் பட்டு முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்து, 69 வயது விஞ்ஞானக் கிழவர் காலிலியோ ரோமாபுரி மதாதிபதிகளால் குற்றம் சாற்றப் பட்டு விசாரணைக்கு இழுத்துவரப் பட்டார்! அவர் செய்த குற்றம், மதத் துரோகம்! போப்பாண்டவர் எச்சரிக்கையை மீறிப் ‘பூமியே மையமாகிச் சூரியன் உள்பட ஏனைய கோளங்களும் அதைச் சுற்றுகின்றன ‘ என்னும் டாலமியின் நியதி [Ptolemy ‘s Theory] பிழையானது என்று வெளிப்படையாகப் பறைசாற்றியது, காலிலியோ புரிந்த...

காமராஜர்- வாழ்க்கை வரலாறு (1903 - 1975)

Image
"கல்விக்கண் திறந்த முதல்வர்"  பெருந்தலைவர் காமராசர் விருதுநகரில், 1903 ஆம் ஆண்டு குமாரசாமி, சிவகாமி இணையருக்குப் பிறந்தவர். நாட்டாண்மைக் காரக் குடும்பத்தில் பிறந்து இளம் வயதிலிருந்தே பல பஞ்சாயத்துகளைக் கண்டு வளர்ந்தவர். அவரின் சாதனைகளைப் பற்றி இவண் காண்போம். இளமைக் கல்வி   திண்ணைப் பள்ளியில் நடுநிலை வரை கற்றார். பின் கல்வி, உணவு ஆகியவை வழங்கப்பட்ட உயர்நிலைப் பள்ளியில் கற்றார். விடுதலைப் போராளிகள் சிலரின் கூச்சலை கவனித்தார். அவர்கள் கூறிய "வந்தே மாதரம்" என்னும் மந்திரம், காமராஜரின் மனத்தில் ஆழமாகப் பதிந்து, விடுதலை உணர்வை அவருள் ஊட்டியது. அனால், குடும்பத் துன்பம் காரண்மாகப் பள்ளியிலிருந்து விலகினார். எனினும், நூலகங்களுக்குச் சென்றும், செய்திதாள்களைப் படித்தும், அரசியல் கட்சித் தலைவர்களின் உரையைக் கேட்டும் திறமைகள் பலவற்றை வளர்த்துக்கொண்டார். அரசியல் ஈடுபாடு   இளமையிலேயே காங்கிரசுக் கட்சியில் தொண்டராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். கட்சிப்பேரணிகளில் கலந்து கொண்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவரது அளவற்ற தேசியப்பற்றைக் கண்ட கட்சித்தலைவர்...